Showing posts with label அருளுரை. Show all posts
Showing posts with label அருளுரை. Show all posts

Friday, February 4, 2011

அன்பின் பொறி



அன்பின் பொறி தன்னிடம் இல்லாத எந்த உயிரும் வாழவில்லை.  பித்தன் கூட ஏதோ ஒன்றையோ யாரோ ஒருவரையோ தீவிரமாக நேசிக்கிறான். இந்த அன்பு உனது உண்மைத்தன்மை நிலையான பிரேமஸ்வரூபனின் (அன்பின் வடிவத்தை ), உனக்குள் குடி கொண்டிருக்கும் இறைவனின் பிரதிபலிப்பே அன்றி வேறல்ல என்று நீ கண்டு கொள்ள வேண்டும். உனது இதயத்தில் கொப்பளிக்கின்ற அன்பின் ஊற்று இல்லாமல் உனக்கு நேசிக்க வேண்டும் என்ற உந்துதலே இருக்காது. அந்த ஊற்றினை கண்டுகொள். மேலும் மேலும் அதனையே சார்ந்து இரு. அதன் சாத்தியக்கூறினை வளர்த்துக்கொள். உலகம் முழுவதும் அதைக்கொண்டு பாசனம் செய். சுய நலத்தின் தொடுகை எதுவாயினும் அதனை துறந்துவிடு. யாருக்கு நீ பயன் தருகிறாயோ அவரிடமிருந்து பிரதியாக எதனையுமே எதிர்பார்த்து நாடி நிற்காதே. 
- ஸ்ரீ சத்ய சாயி  
Page 61, Chapter 8- சாலைகள் பல 
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம் - Volume 1

Monday, December 13, 2010

வாழும் கலை


வாழும் கலை 
நாக்கு கூர்மையான பற்களுக்கிடையே கடி படாமலும் காயம் படாமலும் மிகவும் லாவகமாக செயல்படுகிறது. அதுபோல தீய சக்திகளும் தீமைகளும் மலிந்த இவ்வுலகில் நீங்கள் நல்லவர்களாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
- பாபா

Friday, November 26, 2010

தரிசன மகிமை


"எனது தரிசனம் முடிந்த பின் அமைதியான ஒரு இடத்தில எப்போதும் அமரவும். அப்போது உங்களிடத்தில் ஓர் ஆழ்ந்த அமைதி ஊடுருவும். அத்துடன் எனது  ஆசீர்வாதத்தையும்  நீங்கள் முழுமையாக பெறுவீர்கள்.  இங்கே உங்களிடையே நான் வரும்போது என்னிடமிருந்து  என் ஆற்றல் வெளியேறுகின்றது. 

நீங்கள் உடனடியாக பேச முற்படுவீர்களாகில் இந்த  புனிதமான ஆற்றல்  கலைந்து, பயனற்று   என்னிடமே திரும்பி வந்து விடுகிறது.எனது பார்வை படும் இடம் எல்லாம் பேராற்றல் பெற்று புத்துணர்வுடன் திகழும் என்று உறுதி அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு நாளும் நீங்கள் மாறிக்கொண்டே இருக்கிறீர்கள். இந்த தரிசனத்தில் பெரும் பேற்றை ஒரு போதும் குறைத்து எடை போடாதீர்கள். உங்களிடையே நான் உலாவுவது அதி உன்னதமான தேவர்களுக்கு வழங்ககூடிய ஒரு வெகுமதி ஆகும். இந்த வெகுமதியை (அருளை) நீங்கள் தினமும்  பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். அதற்க்கான நன்றியுடன் இருங்கள்.

நீங்கள் பெரும் இந்த ஆசீர்வாதம் உரிய காலத்தில் முழுமையான பலனை நல்கும். அதே சமயத்தில் இறைவனிடமிருந்து நீங்கள் அதிகமாக பெறுவதைப் போலவே, உங்களிடமிருந்தும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். "
                                                                                                                                                                             -பாபா  

<<<===============================================================>>>

Thursday, November 25, 2010

அருளுரை


"எல்லோராலும் தெய்வ தன்மையை புரிந்து கொண்டுவிட முடியாது. இந்த உலகம் முழுவதும் என்னை தூற்றினாலும் நான் சோர்ந்து போக மாட்டேன். போற்றினாலும் பூரித்து போக மாட்டேன்.  அதே போல நீங்களும் ஆன்மாவில், சத்தியத்தில் ஊன்றி நிலைத்து விட்டீர்கள் என்றால் எவ்விதமான் கவலைகளோ துயரங்களோ உங்களை பிடிக்காது"
-பாபா
<<==============================================>>