ஒரு தந்தைக்கு மிகவும் சோம்பேறியான ஒரு மகன் இருந்தான். அவனைத் திருத்த முடியாமல் அவனுக்கு ஜோடி மாடுகளும் எண்ணெய் ஆட்டுவதற்கு ஒரு செக்கும் வாங்கிக்கொடுத்து தனியே எண்ணெய் ஆட்டிப் பிழைத்துக்கொள்ள செய்துவிட்டார். அந்த சோம்பேறி அப்போதும் திருந்த வில்லை. மாடுகளை செக்கில் கட்டியவுடன் அதன் கொம்புகளில் சலங்கையை கட்டினான்.
மாடு சுற்றும்போது சலங்கை சத்தம் கேட்கும். அது நின்று விட்டால் சத்தமும் நின்று விடும். அப்போது மட்டும் அதை கவனித்து ஓட்டினால் போதும். அது வரை நிம்மதியாக வேறு இடத்தில் படுத்து இருக்கலாம் - இப்படி எண்ணி அவன் அப்படி செய்தான். கொஞ்சம் நேரம் கழித்து எழுந்து வந்து கவனித்தான். செக்கில் அவன் போட்ட எள் அப்படியே இருந்தது. மாடு மட்டும் சுற்றிக்கொண்டிருந்தது.
'இவ்வளவு நேரம் சலங்கை சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததே. அனால் எண்ணெய் ஆட்டப்படவில்லையே' என திகைத்து மறுபடியும் மறைவில் போய் நின்று கவனித்தான்.
இவன் போய்விட்டதைக் கண்ட மாடு சுற்றுவதை நிறுத்தி விட்டு ஒரே இடத்தில் நின்று கொம்பை மட்டும் ஆட்டி சலங்கை சத்தத்தை உண்டு பண்ணியது.
சோம்பேறியுடன் பழகிய மாடு அல்லவா அது !
மனிதன் இன்பமாக வாழவே பிறந்திருக்கிறான். ஆனால் அவன் துன்பத்தில் தவழுகிறான். இது வருந்தத்தக்க விஷயம். ஆனந்தத்தின் ஆதாரம் மனிதனிடமே இருக்கிறது.
நேர்மையான வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று தனது கடமைகளின் மேல் பக்தி கலந்த ஈடுபாடு.
கடமையே கடவுள். வேலையே வழிபாடு.
(Source: bababooks.org)
நேர்மையான வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று தனது கடமைகளின் மேல் பக்தி கலந்த ஈடுபாடு.
கடமையே கடவுள். வேலையே வழிபாடு.
-பாபா
(Source: bababooks.org)
No comments:
Post a Comment